மஹிந்த ராஜபக்ஷ களவாக அல்லது பலவந்தமாக பிரதமர் பதவியை எடுக்கமாட்டார் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், மக்களுக்காக பதவியை கைவிடும் ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்றார்.
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முயற்சியின் அடிப்படையில், கொழும்பு நகர் முழுவதும் இராணுவத்தினர் களமிறங்கப்பட்டனர் என்ற பிரசாரம் முழுமையாக பொய்யானது. அத்துடன் அடிப்படையற்ற கதையாகும் என்று தெரிவித்த காரியவசம், அரசியல் ரீதியில் பின்னடைவை சந்தித்த நபரே இவ்வாறான கதைகளை அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும் என்றார்.