துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

 


ஹம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஹம்பாந்தோட்டை - சிறிபோபுர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில், பொலிஸார் மேலதிக விசசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R