வவுணதீவு பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!!

 

 




 
 
கிழக்கு மாகாணத்தில் இவ்வாரத்தினை டெங்கு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு இடங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கிணங்க விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு
மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று (18) பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இச்சிரமதான நிகழ்வு பிரதேச செயலக வளாகம் உட்பட அதனை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது.
பிரதேச செயலக பிரிவின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் எனப் பலரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.