கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

 


வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸில்  நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மூன்று அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.