(கல்லடி செய்தியாளர்)
கல்லடி சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு ஆலய தேருக்கான வடம் கன்னன்குடா கண்ணகையம்மன் ஆலயத்திலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை விஷேட பூஜையினைத் தொடர்ந்து அடியவர்களின் கரங்களினால் ஏந்திய வண்ணம் சுமார் 15 கிலோமீற்றர் பயணித்து கல்லடி முருகன் ஆலயத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜையைத் தொடர்ந்து, குறித்த வடம் கல்லடி பிரதான வீதியூடாக கல்லடி சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.
அங்கு விஷேட பூஜைகள் நிகழ்த்தப்பட்டு, குறித்த வடம் கன்னன்குடா கண்ணகையம்மன் ஆலய நிர்வாகத்தினால் உத்தியோகபூர்வமாக கல்லடி சித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.