வடக்கு-கிழக்கில் மே 12 முதல் மே 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
வாரமாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாளான
இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில், முள்ளிவாய்க்கால் கஞ்சி
பரிமாறப்பட்டது.
‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்து கதை
பகிர்வோம்’ எனும் தொனிப் பொருளிலில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார
முதலாம் நாள் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இறுதி யுத்ததின்போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை
நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கஞ்சி
வழங்கப்பட்டது.
மதத்தலைவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத்தினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின்
பிரதிநிதிகள் என பலரும்
கலந்துகொண்டனர்.