கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 


 சுவிஸ் உதயம் அமைப்பால் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் வறிய பிரதேச செயலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு நாமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வறுமைக்கோட்டிற்குபட்ட தெரிவு செய்யப்பட்ட 72 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் தலைமையில் நடைபெற்றது.