மாணவர்களுக்கான விழிப்புணர்வு சித்திரப்போட்டி இடம்பெற்றது

 


மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் மண்டபத்தில், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு சித்திரப்போட்டி  இடம்பெற்றது

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் சூழல் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில், செடெக் நிறுவனத்துடன் இணைந்து, மிசுரியர் நிதி அனுசரணையில் ‘இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பாதற்கான படிக்கல் எனும் தொனிப்பொருளில் சித்திரப்போட்டி நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் சூழல் பாதுகாப்பு குழுவின் திட்ட இணைப்பாளர் ஏ.டி சொலமனின் ஒழுங்கமைப்பில், எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி ஏ.ஜேசுதாசன்
தலைமையில் இடம்பெற்ற சித்திரப் போட்டி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கரிதாஸ் எகெட் நிறுவன உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர்