மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி கடலில் கடற்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

 


மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி கடலில் திடீரென ஏற்பட்ட கடற்பெருக்கு காரணமாக கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

களுதாவளைப் பகுதியில் நேற்றைய தினம்(15.05.2023) கடல் நீர் உட்புகுந்ததால் அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியியுள்ளது.

இதனையடுத்து கடல் நீர் திடீரென கிராமத்தை நேக்கி மேலெழுந்து வருவதை அவதானித்த கடற்றொழிலாளர்கள் தோணி, படகுகள், உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

 வருடாந்தம் இக்காலப்பகுதியில் கடல்நீர் பெருக்கெடுக்கும் நிலையில் இந்தமுறை சற்று அதிகமாகக் காணப்படுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், தேத்தாதீவு, மற்றும் செட்டிபாளையம் போன்ற பல பகுதிகளிலுமுள்ள கடற் பிராந்தியங்களிலும், இவ்வாறு கடல் நீர் கிராமங்களை நோக்கி உட்புகுந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.