மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சகஸ்ர சங்காபிசேக விஞ்ஞாபனம் மற்றும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

 


 மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக தின மணவாளக் கோல சகஸ்ர சங்காபிசேக விஞ்ஞாபனம் மற்றும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு 11வருட நிறைவினையொட்டி மணவாளக்கோல உற்சவம் நடைபெற்றது.
நேற்று மாலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகியதுடன் யாகபூஜை, திரவிய அபிசேகம் நடைபெற்று மூலமூர்த்திக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரரராஜ குருக்கள் தலைமையில் 1008 சங்குகள் கொண்டு சகஸ்ர மஹா சங்காபிசேகமும் ஆலய முன்றிலில் மஹா கணபதிஹோமமும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
மணவறையில் மணவாளக்கோலம் பூண்டிருந்த மாமாங்கேஸ்வரரிற்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றதுடன் முருகப்பெருமான் மற்றும்
விநாயகருக்குமட விசேட பூஜைகளும் நடைபெற்றன.