பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞர் நாடு கடத்தப்படுவாரா ?

 


பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரை நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அஞ்சு என்ற பாதாள உலக குற்றவாளியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஆவணங்களும் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு காவல்துறையினரால் அந்த ஆவணங்கள் ஆராய்ந்த பின்னர் குடு அஞ்சுவை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.