கின்னஸ் சாதனை படைத்த மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் சங்கமம் நிறுவனத்தினால்
நட்டத்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை நடன போட்டியில் மட்டக்களப்பு நிருத்திய
கலாலய நடன பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
உலக நாடுகளில் இருந்து 2ஆயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள்
கலந்து கொண்டு ஒரே மேடையில் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை நடன போட்டியில்
மட்டக்களப்பில் இருந்து 15 மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவிகளையும், மாணவிகளை நெறிப்படுத்திய நிருத்திய கலாலய நடன பள்ளி ஆசிரியை வசந்தி நேருவையும் பெற்றோர்கள் பாராட்டி கௌரவித்தனர்.
குறித்த சாதனையானது நிருத்திய கலாலய நடன பள்ளியின் மூன்றாவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.