மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச்சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் கடந்த 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.