ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் புதிதாக மருத்துவ பீட கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன

 


ஊவா மாகாணத்திலுள்ள ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள  மருத்துவ பீட கல்விச் செயற்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வருட உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட முடிவுகள் வெளியாகிய பின்னர் 50 மாணவர்களை முதன்முறையாக மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழகத்திற்கு நேற்று முன்தினம் (27) கண்காணிப்பு செய்ய சென்றிருந்த அமைச்சர் தெரிவித்தார்.