மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

 


மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘வலி சுமந்த காலத்தில் உயிர் காத்த உணவு’,’வரலாற்றை இளைய சந்ததிக்கு கடத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நிறுவக முன்றலில் இடம்பெற்றது .

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை நினைவு கூரும் வகையில், நினைவலை துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கபட்டன.

நிகழ்வில் அருட்பணி ஜெகதாஸ் அடிகளார், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர் .