இந்தியாவின் சொகுசுக்கப்பல் 1600-பயணிகளுடன் இலங்கை வந்தடைந்தது

 

 



இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சொகுசு சுற்றுலாப் பயணிகளுக்கான கப்பலை அறிமுகப்படுத்தும் முகமாக, Hayleys குழுமத்தின் போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கும்  பிரிவான அட்வன்டிஸ் (Advantis), Cordelia Cruises இன் MS Empress ஐ   வரவேற்றது.

 இந்தியாவின் உயர்மட்ட கப்பல் வரிசைகளில் ஒன்றான Cordelia Cruises உடனான புதிய
கூட்டாண்மையைப் பயன்படுத்தி, Advantis குழுவினர் சென்னையில் இருந்து வந்த 1,600 சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றனர். இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய மேள கலைஞர்களின் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.