(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு நகர் குளக்கட்டு ஸ்ரீ கண்ணகைம்மன் ஆலய உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது.
இதன்போது தேவாதிகள் மற்றும் அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தீமிதிப்பில் ஈடுபட்டனர்.
இவ்வாலய உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, நாளை திருக்குளிர்த்தி பாடுதலுடன் நிறைவுபெறவுள்ளது.
ஆலய உற்சவக் கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பரசாந்தரூபக் குருக்கள் தலைமையில் ஆலய உதவிக்குரு சிவத்திரு இ.பவித்திரன் ஐயா, ஆலய பிரதம பூசகர் சக்தி சாதகர் க.சித்திரவேல் ஐயா மற்றும் உதவிப் பூசகர்களான சி.சோதீஸ்வரன், ந.நவராஜா, இ.நிசாந்தன், அ.ஞானப்பிரகாசம் ஆகியோரால் நிகழ்த்தப்படுகின்றன.