(கல்லடி செய்தியாளர்)
கல்லடி சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீமிதிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 2023.06.04 அதிகாலை இடம்பெற்றது.
அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தீமிதிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு கல்லடிப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய உற்சவம் மேமாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.