சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் 27 வயதான யுவதி,வியாழக்கிழமை (8)
உயிரிழந்ததுடன் பாதிக்கப்பட்ட 3 பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்,
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.
மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய உயேந்தினி என்பவரே இல்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினம் மதிய உணவினை
உண்ட பின்னர் சுமார் 2 மணியளவில் இதில் உயிரிழந்த பெண் மற்றும் அவரது 4
மற்றும் 7 வயது இரு குழந்தைகள்; அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த
நிலையில் மயக்கமடைந்துள்ளனர்.
அவர்களை கஞவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் 27
வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 வரும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்
சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.