சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும்.

 

 


 

எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து  சீமெந்து உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடியதாக நேற்று  (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் சீமெந்து உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல் குறித்தும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.