62-வயதில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான முதியவர் .

 


மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் அதர்வேடியா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் குஷ்வாகா (வயது 62), இவரது மனைவி கஸ்தூரி பாய் (60). இவர்களது 18 வயது மகன் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

எனவே குழந்தையின்றி இந்த தம்பதியினர் தவித்தனர். இந்நிலையில் கஸ்தூரிபாய் தனது கணவர் கோவிந்திடம் 2 ஆவது திருமணம் செய்து கொள்ள கூறினார். அதன்படி கோவிந்த், ஹீராபாய் (30) என்ற பெண்ணை 2 ஆவது திருமணம் செய்தார்.

திருமணமாகி 6 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம் அடைந்த ஹீராபாய்க்கு கடந்த 12 ஆம் திகதி இரவு பிரசவ வலி ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஹீராபாய்க்கு அடுத்த நாள் காலை அறுவை சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகள் பலவீனமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.