8 வயது சிறுமியை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய முயன்ற 64 வயது முதியவர் கைது

 


வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி  அழைத்து சென்று  பாலியல் துஸ்பிரயோகம் செய்ய  முயற்சித்த முதியவரை ஞாயிற்றுக்கிழமை(25)  கல்முனை தலைமையக பொலிஸார்  கைது  செய்துள்ளனர்.

தனது வீட்டின் வளவில் விளையாடிக்கொண்டிருந்த சுமார்  8 வயதினை உடைய சிறுமியை அவ்வழியால் மாடு மேய்த்து கொண்டிருந்த  64 வயது மதிக்கதக்க முதியவர் தேங்காய் பறித்து தருவதாக அழைத்து சென்று அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக சிறுமியின் உறவினரால்  முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சந்தேக நபரான   முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  திங்கட்கிழமை  (26) நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக சிறுவர் பெண்கள் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.