இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.தொற்று
நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன.ஆனால் தொற்று நோய்க்கு
கொடுக்கின்ற கரிசனையை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை என
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியும் மாவட்ட தொற்றாநோய் விழிப்புணர்வு
அதிகாரியுமான வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
நீரிழிவு புற்றுநோய் சிறுநீரகம் போன்ற தொற்றா நோய்களினாலேயே நாட்டில் 82 சதவீதமான மரணங்கள் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.