மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்திலிருந்து BAND வாத்திய குழு மாணவர்கள் எதிர்வரும் 2023.06.17 திகதி வெபர் மைதானத்தில் நடைபெற இருக்கும் மட்டக்களப்பு கல்வி வலய BAND வாத்திய போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .
மாணவர்களின் பயிற்றுவிப்பாளரோடு உரையாடிய தருணம் கடந்த 19 வருடங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட வாத்திய கருவிகளை கொண்டே இன்றுவரை BAND வாத்தியம் இசைக்கப்படுவதாக தெரிவித்தார் ,அவற்றில் சில கருவிகள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் , கழுத்து பட்டிகள் BELT சேதமடைந்து இருப்பதால் சீராக அணிய முடியாமல் சிரமப்படுவதாகவும் அறிய முடிந்தது . மாணவர்களோடு கலந்துரையாடிய போது நகரில் உள்ள தேசிய பாடசாலைகளில் இருந்து வரும் BAND- குழுவினரோடு போட்டி போடுவதென்றால் புதிய கருவிகள் அவசியம் தேவை , சேதமடைந்த இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு போட்டியில் கலந்து வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலான விஷயம் என்று தெரிவித்ததோடு , புதிய கருவிகள் கொள்வனவு செய்வது பொருளாதார பிரச்சினை எனில் இசைக்கருவிகளை திருத்தி அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர் .
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய பழைய மாணவர்கள் ,கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் , நலன் விரும்பிகள் , வசதி உள்ளவர்கள் இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு புதிய இசைக்கருவிகளை கொள்வனவு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள் , குறைந்தது இசைக்கருவிகளையாவது திருதிக்கொடுக்க முன் வருமாறு வேண்டப்படுகிறீர்கள் .
நமது கிராமத்து பாடசாலையை தேசிய பாடசாலை மட்டத்துக்கு உயர்த்தவும் , மாணவர்களின் கல்வித்தரத்தை மேன்படுத்தவும், ஆரோக்கியமான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதும் உங்களின் கடமை .