இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 


 

இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களால் இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் என்று புளூம்பேர் செய்தி வெளியிட்டுள்ளது.

290 ரூபாயாகக் காணப்படும் அமெரிக்கடொலரின் பெறுமதி டிசெம்பர் மாத இறுதிக்குள் 350 ரூபாயாக உயர்ந்து இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் பிணை முறிச் சந்தையின் வரத்து ஆகியவற்றால் இலங்கை நாணயத்தின் ஆதாயம் உலகளவில் வருமானத்தைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட 2 பில்லியன் டொலர் நிதி வசதி காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியதாகவு இலங்கையின் பொருளாதாரம் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மோசமான நெருக்கடியிலிருந்து மெதுவாக வெளிவருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும், கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தைப் பெறவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது, ரூபாயின் மீது மீண்டும் அழுத்தம் ஏற்பட்டு புதிய தாழ்வுகளுக்குப் பாதை அமைக்கலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
 
ஜூன் மாத தொடக்கத்தில் பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடந்த வாரம் தெரிவித்தார்.  

இந்நிலையில், இந்த காலாண்டில் ஒரு டொலருக்கு நிகரான  ரூபாயின் மதிப்பு 280 முதல் 320 வரை வர்த்தகம் செய்யப்படலாம் என்றும்  ஆண்டின் இரண்டாம் பாதியில் டொலரின்  பெறுமதி உயரும் என்று ஃபர்ஸ்ட் கப்பிடல் தெரிவித்துள்ளது என்று புளூம்பேர்க் சுட்டிக்காட்டியுள்ளது.