காதல் தோல்வி , கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் தற்கொலை.

 


கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதல் தோல்வி காரணமாக இப்பட்டதாரி மாணவி அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவனான குறித்த யுவதியின் காதலனின் மனமாற்றம் காரணமாக மனமுடைந்த யுவதி அதிகளவான மாத்திரைகள் உட்கொண்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  (25) உயிரிழந்துள்ளார்