2023ம் வருட சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு Beat Plastic Pollution எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் பாவனையை குறைக்கும் முகமாக மட்டக்களப்பில் இயங்கி வரும் முன்னணி தன்னார்வ தொண்டர் நிறுவனமான ஹெல்ப் எவரின் உறுப்பினர்களால் மட்டக்களப்பு நாலவடி கடற்கரையில் பகுதியில் சிரமதானம் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஹெல்ப் எவர் அமைப்பினர் வருடா வருடம் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரை பிரதேசத்தில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கடற்கரையை தூய்மை படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.