இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணங்கள் ஜூலை முதலாம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணம் 17,928 ரூபாவிலிருந்து 21,467 ரூபாவாகவும், பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,774 ரூபாவிலிருந்து 4,483 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.