(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தலுக்கமையவும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரின் உத்தரவுக்கமையவும் வலயத்திலுள்ள பாடசாலைகளில் இன்று புதன்கிழமை (07) டெங்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் டெங்கின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையிலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து டெங்கு பரவக் கூடிய இடங்கள் அழித்தொழிக்கப்பட்டன. குறித்த பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் சிரட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன.