எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.

 


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றில், எரி​பொருள்,  போதுமானளவு கையிருப்பில் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் முன்பதிவு வழங்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத இருப்பை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கேட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.