சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலைக்கூடல்!











(கல்லடி செய்தியாளர்)

சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனை- வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏ.டி.ரி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய கலைக்கூடல் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06)
மண்முனை- வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லட்சண்யா பிரசந்தன் தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில், மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஆ.நவேஸ்வரன் பிரதம அதிதியாகவும், கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் திருமதி புளோரன்ஸ் பாரதி  கென்னடி மற்றும்  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  த.மலர்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், ஐக்கிய நம்பிக்கை நிதிய இயக்குனர் ரகு பாலச்சந்திரன், கெல்விட்டாஸ் கிழக்குப் பிராந்திய திட்ட உத்தியோகத்தர் ந.ரமேஸ் மற்றும் ஐக்கிய நம்பிக்கை நிதிய கிழக்குப் பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜெபசுதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மட்டக்களப்பு மங்களராம விகாரை சங்கைக்குரிய தேரர் மஹியங்கனை விமல கீர்த்தி ஹிமி, சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடிப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ச.குககநாதன் சர்மா, வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் தேவாலய வணபிதா சீ.வி.அன்னதாஸ் மற்றும் மட்டக்களப்பு ஜாமி உஸ்ஸலாம் ஜும் ஆ மஸ்ஜித் மௌலவி றியாஸ் ஆகியோர் ஆன்மீக அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பல்சமய நடனம், பறங்கிய நடனம், நாடகம், வாத்திய இசை ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.