ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் 'குடும்ப விபசாரம்' ஆகும்.
மீண்டும் 'குடும்ப விபசாரம்' சென்னையில் தலை தூக்கியது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள். கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
பொலிஸில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
பின்னர் நீதிமன்றம் மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்.
சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களை இந்த தொழிலில் தள்ளிய தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். மற்றுமொரு தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்.
கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து 'குடும்ப விபசார'த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தரகர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.