கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வார நிகழ்வுகள் 30.05.2023ம் திகதி முதல் 05.06.2023ம் திகதி வரை நடைபெற்றன.
அந்தவகையில், பிரதேச செயலாளர் எஸ். எச்.முஸம்மில் தலைமையில்
"பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் மற்றும் பேண்தகு காணி முகாமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு (05.06.2023) கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
அத்துடன் "உயிர்ப்பல்வகைமை மற்றும் நீர் மாறும் மூலாதாரங்களை பாதுகாத்தல்" தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சிரமதானம் (01.06.2023) பாலைநகர் குளத்திலும், சுற்றாடல் சுத்தப்படுத்துகை நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக வளாகம், கோறளைப்பற்று மத்தி புனானை கிழக்கு ஜெயந்தியாய மீள் எழுச்சி கட்டட வளாகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என். எம். எச். முகம்மட் ஏற்பாடு மற்றும் வழிகாட்டலில் (01.06.2023) நடைபெற்றது.
இதன்போது, பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் , காணி வெளிக்கள போதனாசிரியர்கள் சி. எம். எம்.சமீம் மற்றும் வை. நவாஸ் ஆகியோர் வளவாளர்களாகத் பிளாஸ்டிக் கழிவின் விளைவுகள், அதனை எவ்வாறு முகாமை செய்தல் என்ற விடயம் தொடர்பான வழிகாட்டலை வழங்கினர்.
இந்நிகழ்வுகளில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச். எம். எம்.றுவைத், சுற்றாடல் அதிகாரி ஏ ஜே. எம். முயீஸ், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் களான எஸ். சுவஸ்திகா (சமுர்த்தி அபிவிருத்தி), ஏ. எல்.ஐயூப்கான் , ஏ.சம்றியா (விவசாய அபிவிருத்தி), எஸ். ராதிகா (பொருளாதார அபிவிருத்தி), ஏ. நஜீம் (சமூக சேவை), தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் எம். எம். ஏ.சாதாத், தியாவட்டவான் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். எச். எம். அறபாத், அலுவலக ஏனைய உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை அந் நூர் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.