கடலலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளனர்.

 


கடற்கரையோரத்தில் உள்ள கல்லொன்றின் மீது அமர்ந்திருந்த ஐந்து இளைஞர்களில் மூவரை கடலலை கடலுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம், கிரிந்தையில் இடம்பெற்றுள்ளது.

பிபில பிரதேசத்தில் இருந்து வந்திருந்தவர்களே இவ்வாறு கடலலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலை​யில் மரணமடைந்துள்ளனர்.

இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காணாமற் போனவரை தேடுவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக பிர​தேசவாசிகள் தெரிவித்தனர்.