பூசாரி ஒருவர் தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 


அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.