உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

 


உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று பாணந்துறை கடற்கரையில் இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது.

நாட்டுக் கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவற்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பாணந்துறை கடற்கரையில் இந்த ஆமை சுமார் 06 அடி 07 அங்குல நீளம் கொண்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க,

"உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விளிம்புகளை கொண்டுள்ளன. 

 வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை மற்றும் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருகின்றன.