(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு கல்வி வலயம், பட்டிருப்புக் கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய வரலாறு பாடக் கல்விக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை (30) மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வரலாறு பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன், மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயாகரன் மற்றும் ஐந்து கல்வி வலயங்களின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களால் வரலாறு பாடம் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் காட்சிபப்படுத்தப்பட்டிருந்தன.