கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் அவரது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது.