உத்தேச ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியின் நிறைவேற்று சபை நேற்று (05) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றம் ஊடாக எடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்