அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் உள்ள
இலங்கை வங்கிக்குள் நாகப்பாம்பொன்று உட்புகுந்ததால் நேற்று மாலை
அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் பாம்பைகண்டு
அச்சத்தில் அரண்டுபோன நிலையில், பொலிஸாரின் உதவியோடு சுமார் 5 மணிநேர
போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றியுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் வங்கி பூட்டப்பட்டிருந்த
நிலையில், வங்கிக்குள் நாகப்பாம்பொன்று உட்புகுந்துள்ளது. இதனையடுத்து,
வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து, வங்கிக்குள்ளிருந்த பாம்பை அகற்ற
பொலிஸாருடன் இணைந்து முயற்சித்துள்ளார்.
எனினும், அவர்களால் பாம்பை
பிடிக்க முடியாமற்போன பட்சத்தில், பாம்பு பிடிக்கும் பணியாளர்களை
வரவழைத்துள்ளனர். இருப்பினும், அவர்களாலும் பாம்பை பிடிக்க முடியவில்லை.
அதன்பின்னர்
ஐந்து மணிநேர போராட்டத்துக்கு பிறகு இரவு 9 மணியளவிலேயே பாம்பை பிடித்து,
எடுத்துச் சென்று வெளியே விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.