மே மாதத்தில் இலங்கைக்கு வந்த தினசரி சுற்றுலாப் பயணிகளின் சராசரி எண்ணிக்கையில் வீழ்ச்சி .

 


இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000க்கும் கீழ் சென்றுள்ளது.

அத்துடன், ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 524,486 ஆக அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 83 309 ஆகும். 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 175.5 சதவீத வளர்ச்சியாகும்.

 மே மாதத்தில் இலங்கைக்கு வந்த தினசரி சுற்றுலாப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை 2 687 ஆகும்.

அரசாங்கம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த வீழ்ச்சி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.