ஆசிரியர்கள் என்றால், கேள்விகளைக் கேட்டு, மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். எனினும், அவ்வாறு விடைகளைச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடையளிப்பதற்காக ஒத்துழைப்பு நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அந்த ஆசிரியர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என்று வடமத்திய மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் (பரீட்சை) எஸ்.ஆர் பரியங்கர தெரிவித்தார்.
இந்த ஆசிரியர் அந்தப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர், தன்னுடைய தனியார் வகுப்புகளுக்கு வருகைதந்த மாணவர்களுக்கே
விடையளிப்பத்றகு இவ்வாறு ஒத்துழைப்பு நல்கினார் என ஏனைய மாணவர்களின்
பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவ்வாசிரியர் கடமையில்
இருந்து நீக்கப்பட்டுள்ளார்.