கோட்டாபய ராஜபக்ச அதிபரான பின்னர், அவரின் செயலாளராக பணிபுரிந்த பி பி ஜயசுந்தர மீது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அவர் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யாமல் அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.
அதிபர் தனது செயலாளர் ஒரு "தோல்வி" என்பதை ஒப்புக்கொள்ள அப்போது விரும்பவில்லை. அதிபர் செயலாளராக இருந்த பி. பி. ஜயசுந்தர பதவி இழந்த பின்னரே அவரின் நியமனம் தவறு என்பதை கோட்டாபய ராஜபக்ச உணர்ந்தார்.
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்டவின் மகனின் திருமணத்தில் அவர் இதனை பகிரங்கமாக அறிவித்தார்.
“அவர் என் செயலாளராக வரும் வரை எனக்கு தெரியாது. பி.பி. ஜயசுந்தரவை எனது செயலாளராக நியமித்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்” என முன்னாள்அதிபர் கோட்டாபய தெரிவித்தார். இதன்போது மேசையில் இருந்த அனைவரும் இதைப் பற்றி முன்பு பேசியதை நினைவில் கொண்டு சொன்னார்கள்.
அனுஷ பல்பிட அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பல அமைச்சுகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார். எனவே, அவரது மகனின் திருமணத்தில் முன்னாள் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகள் மற்றும் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.