(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாறுகள் மிக்க ஆதி கால ஆலயங்களுள் பிரசித்தி பெற்ற ஆலயமான கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட குறிஞ்சி, முல்லை ,மருதம் ஒருங்கே அமையப்பெற்ற கோராவெளிக் கிராமத்தில் அமைந்துள்ள கோராவெளி கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவமானது (02)வெள்ளிக்கிழமை நோர்ப்பு கட்டுதலுடன் ஆரம்பமாகி( 03 )சனிக்கிழமை திருக்குளிர்த்தி வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது .
இக்கோவிலில் ஏழு கிராமத்தவர்களுக்கான பந்தல்களான,
சித்தாண்டி பந்தல்,
முறக்கொட்டாஞ்சேன்னை பந்தல்,
சந்திவெளி பந்தல், கோரகளிமடுப் பந்தல்,
கிரான் பந்தல் பந்தல்,
கிண்ணயடிப் பந்தல்,
மீராவோடைப் பந்தல் காணப்படுவதோடு, பிரதானமாக தாய் பந்தல் காணப்படுகின்றது கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தினர் நிர்வாகத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறையும் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து அன்னையின் வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தினை சிறப்பித்தனர்.