பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.