இலங்கை அரசின் முறையற்ற பொருளாதார கொள்ளையினால் நாடு திரும்பும் அபாயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள்.

   



ஏ.கங்காதரன் (ஊடகவியலாளர்)  


     இலங்கையில்  டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியான அதிகரிப்பு காணப்படுகின்றது  இந்த வேளையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையிலும் வீழ்ச்சி காணப்பட வேண்டும் ஆனால்   மாறாக பல பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துக்கொண்டே செல்வதனைக் காணலாம்   இந்தச் சந்தர்ப்பத்தில்; புலம்பெயர் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களே ரூபாவின் திடீர் பெறுமதி அதிகரிப்பினால் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள   அவர்களின் குடும்பங்கள் அத்தியாவசிய பொருட்களுக்கான கொள்வனவு சக்தியை இழந்தவர்களாக  தற்போது காணப்படுகின்றனர்.
  உதாரணமாக கடந்த தை மாதம் 100.00 ரூபாவாக இருந்த கத்தார் றியால் 1 இன் பெறுமதி தற்போது   (31.05.2023) 80.00 ரூபாவாக உள்ளது ஆகையால் கத்தார் றியாலுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 20  வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது   ஆனால் இலங்கையில் ஒரு சில பொருட்களின் விலைகள் மாத்திரம்   ஒரு சிறிய வீதத்தினால் குறைந்துள்ள அதேவேளை அநேகமான பொருட்களுக்கான விலைகள்   அதிகரித்தே காணப்படுகின்றதைக் காணலாம்.

 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைப் பட்டியல்.
 

    திகதி                                                   11-ஜனவரி -23                       31 மே  23
விபரம்                         அளவு                       தொகை                           தொகை      
போஞ்சி                       01  கிலோ                   480.00                                   480.00
தக்காளி                       01- கிலோ                   200.00                                  360.00      
கத்தரி                           01 - கிலோ                  400.00                                   600.00       
வெங்காயம்               01 - கிலோ                  200.00                                  150.00   
உ.கிழங்கு                   01 - கிலோ                  160.00                                   180.00  
தே.எண்ணை            01 - லீட்டர்                  694.00                                   648.00
சீனி                               01 - கிலோ                  220.00                                    225.00           
முட்டை                      01 -  ஒன்று                    54.00                                    44.00  
அரிசி - நாடு               01 -  கிலோ                  220.00                                    220.00     
மொத்தம்                                                          2628.00                                 2907.00
                                                                       
    மாதம்                  கட்டார் ரியால்                                                 இலங்கை ரூபாய்
January- 2023            1                                                                               100.00       
may  2023                  1                                                                               80.00     

 

  

கடந்த தை மாதம் பட்டியலில் உள்ள பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை ரூபாய் 2628.00  தேவையாக உள்ளது   இது கத்தார் றியாலில் 26.28 ஆனால் இதே பொருட்களை கடந்த மே மாதம்  (31.05.2023) கொள்வனவு செய்வதற்கு இலங்கை ரூபாய் 2907.00 தேவையாக இருக்கின்றது  இது கத்தார்
றியாலில் 36.33 ஆகவும் உள்ளது எனவே ரூபாவின் பெறுமதி அதிகரிப்புடன் பொருட்களின் விலையும்   அதிகரித்து காணப்படுவதால் 38.27 வீதத்தினால் கத்தார் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கையில்  
தங்களது கொள்வனவு சக்தியினை இழக்கின்றனர்.   

     இலங்கையில் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது எனவே எங்களது ஊதியத்தினையும் அதிகரிக்கும்படி   புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் தொழில் புரிகின்ற நாடுகளில் கேட்க முடியாது. ஆகையால் எமது   நாட்டினது பணத்தின் பெறுமதி அதிகரிக்கின்றது என்றால் அதில் எமக்கு மகிழ்ச்சிதான் ஆனால் அந்த   பண பெறுமதி அதிகரிப்புக்கு ஏற்றவாறு பொருட்களின் விலையும் அதே விகிதத்தினால் குறைக்கப்பட  வேண்டும் இதுதான் ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கை . இல்லையேல் வெளிநாட்டில் உள்ள  இலங்கையர்கள்  அனைவரும் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பவேண்டிய சூழ்நிலைக்குள்   தள்ளப்படுவார்கள் இந்த  நிலையானது   இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியினை  ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.



     
 

 

 

 

 

 

 

  
.