உலக சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மாபெரும் சிரமதான பணி மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமசேவகர் பிரிவில்
முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு
லையிட் ஹவுஸ் சூழல் பாதுகாப்பு விழிப்பு குழு தலைவர் வி.கே முத்துலிங்கம்,
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஏ.கே.யு.பி.
விமலரத்தின ஆகியோரின் தலைமையில் பாலமீன்மடு சமூக பாதுகாப்பு பொலிஸ் குழு
உறுப்பினர்கள், லையிட் ஹவுஸ் சூழல் பாதுகாப்பு விழிப்புக்
குழு
உறுப்பினர்கள்,பாலமீன்மடு கிராம பொதுமக்கள் என பலர் இணைந்து பாலமீன்மடு
மீனவர் வீட்டுத்திட்ட பகுதிக்கு செல்லும் பிரதான வீதியினை துப்பரவு
செய்யும் பணியை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.