பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 


பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரைத் தேடி குருந்தெனிய பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குருந்தெனிய பிரதேசத்தில் வயல்வெளியில் இருப்பதாக நேற்று (30) மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இவரை கைது செய்ய குறித்த அதிகாரிகள் சென்றுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபரைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.