பாடசாலை மாணவிகள் இருவர் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் காணாமல் போனது குறித்து தமக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன இருவரும் அம்பாறை இங்கினியாகலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
குறித்த மாணவிகள் இருவரும் பிரத்யேக வகுப்புக்குச் செல்வதாக கூறி 15 ஆம் திகதி வீட்டிலிருந்து சென்றதுடன் இன்றுடன் ஏழு நாட்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லை.
பி.ஜி.அஷானி விஷ்மிகா மற்றும் ஆர்.எம்.பவிஷா நெத்மினி என்ற நெருங்கிய நண்பிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரும் இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்பதுடன், கடந்த 15ஆம் திகதி காலை பவீஷாவின் வீட்டிற்கு வந்த அஷானி, தனது தோழியுடன் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும் இதுவரை வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.