மட்டு. எருவிலில் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பாற்குடப் பவனி!








(கல்லடி செய்தியாளர்)

எருவில் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை (29) மேற்படி ஆலயத்திலிருந்து எருவில் அரசடி விநாயகர் ஆலயத்திற்கு முன்னே தெய்வங்கள் செல்ல, அதன் பின்னே பெண்கள் பாற்குடம் ஏந்திச் சென்றனர்.

இதன்போது அடியவர்கள் தமது வாசலில் நிறைகுடம் வைத்து வழிபாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.